tamilnadu

ஒரு நொடியில் 1000 எச்.டி. திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியுமாம்

ஒரு நொடியில் 1000 எச்.டி. திரைப்படங்க ளைப் பதிவிறக்கம் செய்ய முடியுமென ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் நிரூ பித்துள்ளார்கள். உலகின் அதிவேக இணைய வேகம் வினாடிக்கு 44.2 டெராபிட் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவின் மோனாஷ், ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி பல்க லைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் குழு, ஒரு ஆப்டிகல் சிப்பிலிருந்து ‘இதுவரை இல்லாத வேகமான இணைய வேகத்தை பதிவு செய்துள்ளதாக’ அறி வித்துள்ளனர். வினாடிக்கு 44.2 டெராபிட் (Tbps) வேகத்தை பதிவு செய்துள்ளனர். 44.2 டெராபிட் வேகத்தில், பயனர்கள் ஒரு நொடியில் கிட்டத்தட்ட 1000 எச்டி திரைப் படங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த நம்பமுடியாத சாதனையை டாக்டர் பில் கோர்கரன் (மோனாஷ்), புகழ்பெற்ற பேராசிரியர் அர்னான் மிட்செல் (ஆர்.எம்.ஐ.டி) மற்றும் பேரா சிரியர் டேவிட் மோஸ் (ஸ்வின்பேர்ன்) தலை மையிலான ஒரு ஆய்வுக் குழு கண்ட றிந்துள்ளது. ஜீ நியூஸ் இணையதளத்திலிருந்து

;